ஸ்ரீ குரு ஸ்தோத்ரம்
கல்லாலின் புடை அமர்ந்து நான் மறை
அரங்கம் முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிரந்த
பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை
இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத் தொடக்கை, வெல்வாம்
ஸ்ரீ முருகன் துணை
உருவா யருவா
யுளதா யிலதாய்
மருவாய் மலராய்
மணியா யொளியாய்க்
கருவா யுயிராய்க்
கதியாய் விதியாய்க்
குருவாய் வருவா
யருள்வாய் குகனே.
தெய்வமணிமாலை
ஒருமையுடன் நின துதிரு
மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ஒன்று வைத்துப்
புறம் ஒன்று பேசுவார்
உறவு களவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ்
பேச வேண்டும்
பொய்மை பேசாது இருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமானபேய்
பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே
வேண்டுமுனை மரவத்திருக்க வேண்டும்
மதி வேண்டும்
நின்கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வு
நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில்
கந்த கோட்டத்துள்ளவர்
தல ஓங்கு கந்த வேளே !
தன்முகத் துய்யமணி
உன்முகச் சைவமணி
சன்முகத் தெய்வ மணியே !
ஸ்ரீ சிவபுராணம்
மாசில் வீணையும் மாலை மதியம்மும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசுவண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே
நமச்சிவாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சிவாயவே நானறி வீச்சையும்
நமச்சிவாயவே நானாவின் றேத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே.
தென்னாட்டுடைய சிவனே போற்றி
யந்நாட்டவருக்கும் இறைவா போற்றி
ஸ்ரீ கபாலீஸ்வரர் துதி
சீர்கொண்ட கங்கையும் திங்களும் கொன்றையநிதிகழ் சடைக் கங்கையழகும், சிலைமாதனை வென்ற விழிவளருமிருநுதலினிற் திரிபுண்டரத்தினவழகும், பார் கொண்டதிருவயிற்றரசி கற்பகவல்லி பாதத் திருக்குமழகும் பாத விருபோதமாகும் ஏழையேன் கண்டு முற்பழ வினையொழிப்ப தென்றோ, காண்கொண்ட விட முண்ட கண்ட நீலா, இருக்கரத்தோரு கபால சூலா கனமூலா, கமநாலா, மரைமேலாகிய ஷீலா காளியுடனாடுகளா ஆர்கொண்ட கொள்கைக்கு முறிய கோலா, சச்சிதானந்தமான லீலா, அருமையடி யார் தேச திருமயிலையூர் வாச அருள்புரி கபாலிசனே .